News February 13, 2026
SHOCKING: கொலை செய்ய தயாரான AI

AI இவ்வளவு ஆபத்தானதா? ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய AI மாடல் அழுத்தமான சோதனையின்போது அபாயகரமாக செயல்பட்டதாக அதன் கொள்கைத் தலைவர் டெய்சி மெக்ரிகோர் கூறியுள்ளார். அந்த மாடலை நிறுத்தப்போவதாக அதனிடம் கூறியபோது, அது பொறியாளரை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தியதாக கவலை தெரிவித்தார். சிந்திக்கும் திறன்களை கொண்ட AI மீதான கட்டுப்பாடு இல்லையென்றால் அது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இது சான்றாகும்.
Similar News
News February 15, 2026
கற்றல் திறன்.. பிப்.18 ரெடியா இருங்க மாணவர்களே!

1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் சோதனைக்காக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 14,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்பு, கணித அடிப்படை திறன்கள் மதிப்பிடப்பட உள்ளன. பிப்.18 (புதன்கிழமை) மற்றும் பிப்.20-ல் பொதுமக்கள் முன்னிலையில் இந்த மதிப்பீடு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News February 15, 2026
பாஜகவின் சதியை CM முறியடித்தார்: உதயநிதி

தேர்தலை காரணம் காட்டி எப்படியாவது மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடலாம் என்று பாஜகவும், அதன் அடிமை கூட்டங்களும் முயற்சி செய்ததாக DCM உதயநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், அதனை CM ஸ்டாலின் முறியடித்துள்ளார் என்றார். மேலும், ஜனவரியில் மகளிர் உரிமைத் தொகை ₹1,000, பொங்கல் பரிசு ₹3,000 & தற்போது ₹3,000 + ₹2,000 என 2 மாதங்களில் மொத்தம் ₹9,000 மகளிரிடம் CM கொண்டு சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.
News February 15, 2026
மக்கள் நாயகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

நாட்டை காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டிருந்த ரியல் ஹீரோவான குமரியை சேர்ந்த குமாரதாஸ்(37) ராஜஸ்தானில் உயிரிழந்தார். அவரது உடல் டெல்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டு, பின்னர், அவரது சொந்த ஊரான கைதோட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. குமாரதாஸின் உறவினர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் என ஏராளமானோரின் அஞ்சலிக்கு பிறகு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. #RIP


