News December 5, 2024

SHOCK: இணையத்தில் Leak ஆன புஷ்பா 2

image

பான் இந்தியா அளவில், தியேட்டர்களில் மிக கிராண்டாக புஷ்பா 2 படம் இன்று வெளியாகியுள்ளது. படம் ரிலீசாகி ஒருநாள் கூட ஆகாத நிலையில், ஆன்லைன் பைரசி தளங்களில் புஷ்பா 2 சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சுமார் ரூ.500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரான புஷ்பா 2 படத்தின் ஆரம்பகட்ட விமர்சனங்கள் மிகவும் பாசிடிவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

Similar News

News January 4, 2026

இவர்களுக்கு பொங்கல் பணம் ₹3,000 கிடைக்காது

image

தமிழகத்தில் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை புதிய ரேஷன் கார்டுகள் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. ஒருவேளை பொங்கலுக்கு முன் அவர்களின் ரேஷன் கார்டுகள் Activate ஆகவில்லை என்றால், லட்சக்கணக்கானோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் ரொக்கப்பணம் ₹3,000 கிடைக்காது என கூறப்படுகிறது.

News January 4, 2026

அரசு ஊழியர்களை தெருவில் நிறுத்தியது BJP: பெ.சண்முகம்

image

TN அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டத்தை ‘ஏமாற்று வேலை’ என கூறிய நயினாருக்கு CPI(M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, ஆசிரியர், அரசு ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தியது BJP ஆட்சிதான் என்று சாடிய அவர், நாடு முழுவதும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை BJP அமல்படுத்தும் என்று கூறும் தைரியம் நயினாருக்கு இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

News January 4, 2026

பிக்பாஸில் இந்த வார எவிக்‌ஷன்.. இவர் தான்

image

பிக்பாஸில் பார்வதி, கம்ருதீனுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதால் இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்காது என பேசப்பட்டது. ஆனால், ஷோ முடிய இன்னும் 2 வாரங்களே இருப்பதால் எவிக்‌ஷனை திட்டமிட்டுள்ளனர். வீட்டில் உள்ள அனைவரும் நாமினேஷனில் இருக்கும் நிலையில், அரோரா மட்டும் TTF வென்று எவிக்‌ஷனிலிருந்து தப்பித்துள்ளார். இந்நிலையில், குறைந்த வாக்குகள் பெற்றதால் சுபிக்‌ஷா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

error: Content is protected !!