News October 1, 2025
லோன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். அமெரிக்க வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு வங்கிகளுக்கான ரெப்போ வட்டி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரெப்போ ரேட் வட்டி தற்போதைய 5.5% -ஆகவே தொடரும் என்று தெரிவித்துள்ளார். இதனால், தனிநபர் கடன், வாகனம் மற்றும் வீட்டுக்கடன் வாங்கியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News March 16, 2026
அதிமுகவை பாஜக விழுங்கி துப்பிவிடும்: உதயநிதி

நம்மிடம் கார் இல்லையென்றால், காரை புக் செய்து செல்வோம்; அதேபோன்று அதிமுகவை புக் செய்து பாஜக பயன்படுத்துகிறது என உதயநிதி விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், தேர்தலுக்குப் பிறகு நிதிஷ்குமாரை CM பதவியிலிருந்து பாஜக ஓரம்கட்டிவிட்டது; அவருக்கே இந்த நிலை என்றால், ஊர்ந்து சென்ற EPS-யும் ஊதித்தள்ளிவிடும் என்றார். தேர்தலுக்கு பிறகு அதிமுகவை பாஜக விழுங்கி துப்பிவிடும் எனவும் சாடியுள்ளார்.
News March 16, 2026
திமுக மா.செ.,க்கள் கூட்டம் தொடங்கியது

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செ.க்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. மூத்த அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதில், தேர்தல் பணி, கூட்டணி தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வாக்குறுதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
News March 16, 2026
என்னை ஏமாத்திட்டாங்க.. வேதனையில் குஷ்பு!

அமேசான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை குஷ்பு கோபத்துடன் பதிவிட்டுள்ளார். தாயாருக்காக விலையுயர்ந்த Furniture ஒன்றை ஆர்டர் செய்த நிலையில், டெலிவரியே செய்யாமல் டெலிவரி செய்து விட்டதாக ஏமாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 40 நாள்களாக இது குறித்து கஸ்டம்ர் கேரில் பேசி வருவதாகவும், தற்போது ஒருவர் ‘என்ன ஆக்ஷன் வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க’ என அலட்சியமாக பதிலளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


