News October 24, 2024

அம்பானிக்கு ஷாக்! கைவிட்டுப் போகும் 7 சேனல்கள்

image

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் Disney- hotstar ஓடிடி தளத்தை வாங்கும் திட்டத்துக்கு வணிக போட்டிகள் ஆணையம் (CCI) ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால், அதற்கு ரிலையன்ஸ் தான் கையில் வைத்திருக்கும் hungama, super hungama, colors super உள்பட 7 சேனல்களை விற்றுவிட வேண்டும் என நிபந்தனையும் விதித்துள்ளது. ஓடிடி, பொழுதுபோக்கு சந்தையில் ஏகபோக ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 7, 2025

வார விடுமுறை… சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்

image

மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்களின் முதல் ஆசை மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என்பதே. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே ஜூலை 11 – ஆக. 17 வரை வெள்ளி, ஞாயிறுகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதேபோல், ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே ஜூலை 12 – ஆக. 18 வரை சனி, திங்களில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. டூர் போக ரெடியா..!

News July 7, 2025

பெரிய மாற்றமின்றி முடிவடைந்த பங்குச்சந்தை

image

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை பெரிய மாற்றமின்றி முடிவடைந்துள்ளது. அதன்படி சென்செக்ஸ் 9.61 புள்ளிகள் உயர்ந்து 83,442.50 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி 0.30 புள்ளிகள் உயர்ந்து 25,461.30 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிந்துள்ளது. பெரிய ஏற்றத்தாழ்வு இன்றி பங்குச்சந்தை வர்த்தகம் நிறைவுபெற்றுள்ளது.

News July 7, 2025

அஜித் மரணம்… விசாரணை அறிக்கை நாளை தாக்கல்

image

போலீஸ் கஸ்டடியில் அஜித் குமார் உயிரிழந்தது தொடர்பான விசாரணை அறிக்கை நாளை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த 2-ம் தேதி முதல் ஜட்ஜ் ஜான் சுந்தர்லால் சுரேஷ், 20-க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். குற்றம் நடந்த பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டுள்ள அவர், நாளை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். நாளை மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!