News April 9, 2024

’தலைவர் 171’ படத்தில் இணையும் ஷோபனா?

image

33 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ’தலைவர் 171’ படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ஷோபனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஜோடி தளபதி படத்தில் கடைசியாக இணைந்து நடித்திருந்தனர். வரும் 22-ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாக இருக்கிறது. படத்தின் பெயர் ‘கழுகு’ அல்லது ‘ஈகிள்’ என்று வைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 6, 2026

ரத்தன் டாடா பொன்மொழிகள்

image

*இரும்பை யாராலும் அழிக்க முடியாது, அதன் துருவைத் தவிர. அதேபோல் ஒரு மனிதனை யாராலும் அழிக்க முடியாது, அவனது சொந்த சிந்தனையைத் தவிர. *எனக்கு மிகப்பெரிய சந்தோஷமே, ஒருவர் ஒரு காரியத்தை செய்ய முடியாது என்று சொன்னால், அதை செய்து காட்டுவது தான். *இறுதியில், நாம் எடுக்காத வாய்ப்புகளைப் பற்றி மட்டுமே வருத்தப்படுவோம். *மக்கள் உங்கள் மீது வீசும் கற்களைக் கொண்டு ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்குங்கள்.

News April 6, 2026

யாரை திருமணம் செய்யலாம் என்று கூட AI சொல்லும்: பிரதீப்

image

உறவு, உடை, மேக்கப் முதல் மருத்துவம் வரை அனைத்திற்கும் பலர் ChatGPT-யையே சார்ந்திருப்பதாக பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் LIK பட நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் சக மனிதர்களை விட தங்கள் செல்போனை அதிகம் நம்பும் ஒரு சூழல் தற்போது உருவாகியுள்ளதாக தெரிவித்தார். எதிர்காலத்தில், ஒருவர் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதை கூட AI சொல்லும். இதுவே LIK படம் உருவாக காரணம் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!