News March 26, 2024
சிவராஜ்குமாரின் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்

மக்களவைத் தேர்தல் முடியும் வரை கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்த படங்கள் திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக பாஜக சார்பில் அளிக்கப்பட மனுவில், “சிவராஜ்குமார் பிரபலமான வராக இருப்பதால் வாக்காளர்களிடம் அவரது கருத்துகள் ஆதிக்கம் செலுத்தும். இதனால் வேட்பாளர்களிடையே சமநிலையை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படும்”எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
திண்டுக்கல் கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

திண்டுக்கல் மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News December 8, 2025
விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும்: அன்புமணி

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக நிச்சயமாக படுதோல்வி அடையும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று கூறிய அவர், பாமக இருக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்றார். கட்சி பிரச்னை குறித்த கேள்விக்கு, ‘உள்கட்சி பிரச்னைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம். கட்சிக்காரர்களிடம் அது பற்றி பேசுவேன். மீடியாவிடம் அல்ல’ என்று பதிலளித்தார்.
News December 8, 2025
பிரபல பாலிவுட் நடிகர் காலமானார்

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் கல்யாண் சாட்டர்ஜி(81) காலமானார். 1968-ல் அபஞ்சன் படத்தில் அறிமுகமான இவர், கஹானி, சுகர் பேபி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை வென்றார். நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்த அவர், GH-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சத்யஜித் ரேயின் பிரதித்வந்தி உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


