News February 26, 2025
சிவராத்திரி: பஞ்ச பூத ஸ்தலங்கள்

மகா சிவராத்திரியையொட்டி பஞ்ச பூத சிவ ஸ்தலங்களை சிலர் வழிபடுவதுண்டு. அவை [1] காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் (நிலம்) [2] திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் (நெருப்பு) [3] திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயில் (நீர்) [4] தில்லை நடராஜர் கோயில் (ஆகாயம்) [5] காளஹஸ்தி திருக்காளத்தி கோயில் (காற்று). இந்த கோயில்களில் தரிசனம் செய்தால், சிவன் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
Similar News
News February 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: புறங்கூறாமை
▶குறள் எண்: 190
▶குறள்:
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
▶பொருள்: அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?.
News February 26, 2025
KKR அணியை வழிநடத்த தயார்: வெங்கடேஷ் ஐயர்

கொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தால் அணியை வழிநடத்த தயாராக அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். தனக்கு தலைமை பண்பில் நம்பிக்கை இருப்பதாகவும், கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவதில் எந்த ஒரு குழப்பமும் தனக்கு வராது எனவும் தெரிவித்துள்ளார். இதுவரை 50 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 1,326 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News February 26, 2025
இன்றைய (பிப். 26) நல்ல நேரம்

▶பிப்ரவரி- 26 ▶மாசி – 14 ▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 12:00 PM- 01:30 PM
▶எமகண்டம்: 07:30 AM – 09:30 AM
▶குளிகை: 10:30 AM- 12:00 PM
▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம்
▶நட்சத்திரம் : திருவோணம் மா 4.51