News February 24, 2025

சிவராத்திரி.. மகா சிவராத்திரி! என்ன வித்தியாசம்?

image

ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தசி திதி சிவராத்திரியாக அனுசரிக்கப்படுகிறது. அதேநேரம், மாசி மாதத்தின் சதுர்த்தசி திதியை மட்டுமே மகா சிவராத்திரியாக குறிப்பிடுவதற்கு சில காரணங்கள் உள்ளன. மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதியில் தான் சிவன்- பார்வதி திருமணம் நடைபெற்றது என்ற ஒரு கருத்து உள்ளது. அதே போல, சிவப்பெருமான் அன்றைய தினம் ரூத்ர தாண்டவம் ஆடுவதாக நம்பப்படுவதால் மகாசிவராத்திரியாக அனுசரிக்கப்படுகிறது.

Similar News

News February 24, 2025

ஒரே நேரத்தில் பொருட்களை கொடுங்க: அமைச்சர் உத்தரவு

image

குடும்ப அட்டைதாரர்கள் கேட்கும் அனைத்து பொருட்களையும் நல்ல தரத்துடன் ஒரே நேரத்தில் வழங்கிடுமாறு ரேஷன் கடை ஊழியர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். கார்டுதாரர்களிடம் கனிவாக நடந்துக்கொள்ள அறிவுறுத்திய அவர், விநியோகிக்கும் பொருட்களின் எடை சரியாக இருப்பதை உறுதி செய்திடவும் ஆணையிட்டுள்ளார். பொருட்கள் இல்லையென அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News February 24, 2025

லோன் கட்டணத்தை கட் செய்யும் RBI

image

லோன் வாங்கியோருக்கு விரைவில் நல்ல செய்தி ஒன்றை RBI கொடுக்க இருக்கிறது. Floating வட்டியில் லோன் வாங்கியோர் Preclose அல்லது Foreclose செய்தால், தற்போது வரை அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனை ரத்து செய்யலாமா என்று கருத்து கேட்டு வங்கிகளுக்கு RBI கடிதம் எழுதியிருக்கிறது. மார்ச் 21ஆம் தேதிக்குள் வரும் கருத்துகளை வைத்து இந்த கட்டண ரத்து முடிவை RBI எடுக்கவுள்ளது.

News February 24, 2025

சாமுத்திரிகா லட்சணம்: மச்சங்களும் அர்த்தங்களும்

image

சாமுத்திரிகா லட்சணத்தின்படி *புருவத்தின் இடது பக்கத்தில் கறுப்பு மச்சம்- வாழ்க்கையில் தடை, வேறு நிற மச்சம்- அதிர்ஷ்டம் *இடது கண்ணில் மச்சம்- ஆணவம். வலது கண்ணில்- நேர்மை. * வலது கையில்- புத்திசாலி. இடது கையில்- ஆடம்பர விரும்பி. *மூக்கின் நுனி- உணர்ச்சிவசப்படுவர். *மூக்கின் வலதுபுறம்- போராடி செல்வம் சேர்ப்பவர். *மூக்கின் கீழ்- எதிர்ப் பாலினத்தவரை எளிதில் ஈர்க்கக் கூடியவர்.

error: Content is protected !!