News April 21, 2025
சிவாஜி வீடு ஜப்தி உத்தரவு ரத்து!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீடு(அன்னை இல்லம்) ஜப்தி உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாரின் மகன் துஷ்யந்த் வாங்கிய கடனுக்காக சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய கடந்த மாதம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று அந்த உத்தரவை ரத்து செய்துள்ளதோடு நடிகர் பிரபு தான் அந்த இல்லத்திற்கு முழு உரிமையாளர் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News January 8, 2026
தொடர் சரிவில் சந்தைகள்.. டிரம்ப் மிரட்டல் காரணமா?

பங்குச்சந்தைகளின் தொடர் சரிவால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த 4 நாள்களாகவே மீளாத சென்செக்ஸ் இன்று(ஜன.8) வர்த்தக நேர முடிவில் 780 புள்ளிகளை இழந்து 84,180 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், நிஃப்டி 263 புள்ளிகளை சரிந்து 25,876 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இந்தியா மீது <<18795308>>டிரம்ப் 500% வரி விதிக்க முடிவு<<>> செய்துள்ளதால் அந்நிய முதலீட்டாளர்கள் பலர் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.
News January 8, 2026
JUSTIN : தமிழ் நடிகர் அதிரடி கைது

பண மோசடி வழக்கில் நடிகர் அஜய் வாண்டையார் கைது செய்யப்பட்டுள்ளார். Ex MLA ஒருவரிடம் ₹3.5 கோடி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இன்று பெங்களூரு விமான நிலையத்தில் அஜய் வாண்டையாரை கைது செய்த போலீசார், சென்னை அழைத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, இதுபோன்ற வழக்கில் சிக்கியதால், இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News January 8, 2026
நேரு சிறை செல்வதை இனி தடுக்க முடியாது: அருண்ராஜ்

₹1,020 கோடி ஊழல் விவகாரத்தில் அமைச்சர் நேரு சிறைக்கு செல்வதை இனி யாராலும் தடுக்க முடியாது என TVK-வின் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இத்தனை நாள்களாக இதை மூடி மறைக்கப் பார்த்தீர்கள்; ஆனால் இனி நடமாட முடியாது என்ற நிலை வந்தவுடன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளீர்கள் என்று சாடிய அவர், அமலாக்கத்துறையே நேரடியாகத் தூக்கி உள்ளே வைத்துவிடும் என்ற பயத்தினால் இந்த விசாரணை உத்தரவா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


