News October 1, 2024
சிவாஜி வெறும் பெயரல்ல… தமிழ் சினிமாவின் வரலாறு

தமிழ் சினிமாவின் வரலாற்றை நடிகர் சிவாஜி கணேசனை தவிர்த்து விட்டு எழுத முடியாது. அவரது முதல் படமான ‘பராசக்தி’ 1952இல் வெளியானது. நீதிமன்ற கூண்டில் நின்று சிவாஜி பேசும் வசனங்கள் 50 ஆண்டுகளை கடந்தும் இன்றும் நிலைத்து நிற்கிறது. ‘பாசமலர்’, ‘கர்ணன்’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘மனோகரா’ போன்ற பல படங்கள் இவரது நடிப்புத் திறனுக்கான சான்றாக இன்றளவும் உள்ளது.
Similar News
News August 13, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

கேள்விகள்:
1. இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு அமலாக்கப்பட்டது?
2. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது?
3. EXAM முறையை கண்டுபிடித்தவர் யார்?
4. உடலில் ரத்தம் பாயாத பகுதி எது?
5. தாவரங்கள் காற்றிலிருந்து எந்த வாயுவை உறிஞ்சுகின்றன?
பதில்கள் மதியம் 12:30 மணிக்கு Way2news App-ல் வெளியிடப்படும்.
News August 13, 2025
இனிமேல் ₹24க்கே ஆன்லைனில் ITR தாக்கல் பண்ணலாம்

ஜியோ பைனான்ஸ் செயலியில் புதிய வரி திட்டமிடல் (tax planning) மற்றும் ITR தாக்கல், தற்போது புதிய அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு சரியான வரி முறையை ( பழைய – புதிய வரி) தேர்வு செய்யவும், குழப்பங்களை குறைக்கவும், மலிவு விலையில் தாங்களாகவோ அல்லது நிபுணர் உதவியுடனோ வருமான வரிக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்யவும் உதவுகிறது. இந்த திட்டம் வெறும் ₹24 முதல் ஆரம்பமாகிறது.
News August 13, 2025
திமுகவில் இணைந்தது ஏன்? மைத்ரேயன் விளக்கம்

அமைப்பு செயலாளராக இருந்த தன்னை அதிமுக சரியாக பயன்படுத்தவில்லை என திமுகவில் இணைந்த மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் பெரும் குழப்பம் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். EPS பிரச்சாரத்துக்கு வரும் கூட்டம் அழைத்து வரப்படும் கூட்டம் மட்டுமே என்றும் அவர் மக்கள் தலைவர் இல்லை எனவும் கூறியுள்ளார்.