News April 10, 2024
ஸ்டாலின் நடிப்புக்கு முன்னால் சிவாஜியே தோற்று விடுவார்

ஸ்டாலினின் நடிப்புக்கு முன்னால் சிவாஜியே தோற்றுவிடுவார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். கடந்த 15 நாட்களாக பரப்புரை செய்யும் ஸ்டாலின், என்னை பற்றியே பேசுகிறார். தன் ஆட்சியில் ஏதாவது செய்திருந்தால் தானே, அவரால் அதைப்பற்றி பேச முடியும் என கேள்வி எழுப்பிய அவர், அமைச்சர் உதயநிதி விரக்தியின் விளிம்பில் இருப்பதாக தெரிவித்தார். அதிமுகவின் வெற்றியை திமுகவால் தடுத்து நிறுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
Similar News
News April 24, 2025
ஸ்ரீநகருக்கான விமானக் கட்டணம் பாதியாக சரிவு

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, ஸ்ரீநகருக்கான விமானக் கட்டணம் சரிந்துள்ளது. டெல்லி-ஸ்ரீநகருக்கு சென்று வரும் கட்டணம் ரூ.24,000 வரை அதிகரித்திருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலால் பயணிகள் முன்பதிவை ரத்து செய்தது உள்ளிட்டவற்றால் ரூ.11,200ஆக சரிந்துள்ளது. இதேபோல், சென்னை-ஸ்ரீநகர் இடையேயான கட்டணம் ரூ.19,960ஆக இருந்தது. அக்கட்டணம் 51% சரிந்து ரூ.9,775ஆக குறைந்துள்ளது.
News April 24, 2025
+2-க்கு அப்புறம் டிஜிட்டல் மார்க்கெட்டிங்

எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பு ஒரு சூப்பர் சாய்ஸ். டிப்ளமோவில் தொடங்கி முதுகலை படிப்பு வரை இருக்கிறது. Market Research Analyst, Content Marketer/Manager என பல வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. தொடக்க சம்பளமாகவே ₹25,000 – ₹40,000 வரை வழங்கப்படுகிறது. ஃபேஸ்புக், கூகுள் தளங்களில் இலவசமாக கிளாஸ் எடுக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.
News April 24, 2025
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்

அரசு ஊழியர்களை பணியைவிட்டு நீக்குதல், அரசு செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் டாட்ஜ்(DOGE) துறை தலைவர் பதவியிலிருந்து எலான் மஸ்க் விலகியுள்ளார். USA அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு உருவாக்கப்பட்ட இந்த புதிய துறை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் டிரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறுவேன் என்றும் மஸ்க் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.