News October 23, 2024
சிவசேனாவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மகாராஷ்ட்ரா சட்டப்பேரவைத் தேர்தலையாெட்டி 45 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா கட்சி வெளியிட்டுள்ளது. அதில் கோப்ரி பச்பாகடி தொகுதியில் முதல்வர் ஏக்நாத் சிண்டே போட்டியிடுவார் எனக் கூறப்பட்டுள்ளது. மகிம் தொகுதியில் ராஜ் தாக்கரே மகன் அமித் தாக்கரேயை எதிர்த்து சதா சர்வான்கரை சிவசேனா களமிறக்கியுள்ளது. மகாராஷ்ட்ரா சட்டப்பேரவைக்கு நவ.20இல் தேர்தல் நடைபெறவுள்ளது.
Similar News
News January 18, 2026
வாக்குகளுக்காக நிலத்தை தாரைவார்த்த காங்கிரஸ்: PM

காங்., ஆட்சியில் பல தசாப்தங்களாக ஊடுருவல் அதிகரித்து வந்ததாக PM மோடி விமர்சித்தார். அசாமில் ₹6,957 கோடியிலான காசிரங்கா உயர்மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய அவர், காங்., வாக்கு வங்கி அரசியலுக்காக அசாம் மாநிலத்தின் நிலத்தை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்ததாக குற்றஞ்சாட்டினார். ஊடுருவல்காரர்களை வெளியேற்றி, அசாமின் அடையாளத்தை பாஜக பாதுகாத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News January 18, 2026
ஆம்னி பஸ் டிக்கெட் விலை ₹6,000 வரை உயர்ந்தது

பொங்கல் விடுமுறை முடிந்து பலரும் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களின் பர்ஸை பதம் பார்த்துள்ளது. டிக்கெட் கட்டணம் சாதாரண நாள்களை விட 3 மடங்கு உயர்ந்திருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, மதுரை – சென்னைக்கு ₹6,000 வரை வசூலிக்கப்படுகிறது. இதனை அரசு தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
News January 18, 2026
இன்று மாலை மீண்டும் டெல்லி விரையும் விஜய்

சிபிஐ விசாரணைக்காக இன்று மாலை விஜய் டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 2-வது முறையாக CBI முன் விஜய் நாளை ஆஜராக உள்ளார். ஏற்கெனவே கடந்த திங்கட்கிழமை 7 மணி நேரத்துக்கு மேல் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. நாளை மீண்டும் விஜய்யிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.


