News January 8, 2025
ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் ரத்து

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. இடஒதுக்கீடு விவகாரத்தில் வன்முறை வெடித்ததால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இது தொடர்பான வழக்கில், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு 2ஆவது முறையாக கைது வாரண்ட் பிறப்பித்த நிலையில், ஷேக் ஹசினா உள்பட 97 பேரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Similar News
News January 16, 2026
ஜனநாயகத்தை கொல்லும் முயற்சி: உத்தவ் தாக்கரே

நேற்று நடந்த <<18868876>>மும்பை நகராட்சி தேர்தலில்<<>> பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஜனநாயகத்தை கொல்லும் முயற்சி எனவும், மாநில தேர்தல் ஆணையரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, ECI இணையதளத்தில் தங்களது பெயர் இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறி திருப்பி அனுப்பப்பட்டதாக பலரும் புகாரளித்திருந்தனர்.
News January 16, 2026
நீங்களும் கடன் வாங்கி EMI கட்டுறீங்களா?

இன்ஸ்டன்ட் லோன் ஆப்கள், கிரெடிட் கார்டுகளால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் EMI எனும் பெரும் கடன் வலையில் சிக்கியுள்ளது Eresolution Consultancy நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 10,000 பேரில் நடத்தப்பட்ட ஆய்வில், ₹35,000 – ₹65,000 வரை மாத சம்பளம் வாங்கும் 85% பேர் தங்களது சம்பளத்தில் 40% EMI செலுத்துகின்றனர். அடிப்படை தேவைகளுக்கு கூட அவர்கள் பணம் இல்லாமல் தவிப்பதும் தெரியவந்துள்ளது.
News January 16, 2026
ஜாக்கிசான் பொன்மொழிகள்

*வாழ்க்கை நம்மை கீழே தள்ளும், மீண்டும் எழ வேண்டுமா இல்லையா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். *அமைதியாக இருப்பதும், எதுவும் செய்யாமல் இருப்பதும் வேறுவேறு விசயங்கள். *நான் ஏன் ஜாக்கி சான் ஆனேன்? ஏனெனில் பெரும்பாலான மனிதர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன். *நான் ஒருபோதும் அடுத்த புரூஸ் லீ ஆக இருக்க விரும்பவில்லை. முதல் ஜாக்கி சானாக மட்டுமே இருக்க விரும்பினேன்.


