News August 5, 2025

அருங்காட்சியகமாக மாறும் ஷேக் ஹசீனாவின் இல்லம்

image

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. ‘ஜூலை புரட்சி நினைவு அருங்காட்சியகம்’ என அதற்கு பெயரிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் இல்லமாக மாறுவதற்கு முன் இது ராஜ்பரி எஸ்டேட் என்று அழைக்கப்பட்டது. வங்கதேசத்தில் பிரதமருக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்ததையடுத்து ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

Similar News

News August 5, 2025

BREAKING: ஆகஸ்ட் 14ல் அமைச்சரவை கூட்டம்

image

ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 14 அன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பல்வேறு மக்கள் நல திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 5, 2025

தனி நபர் எவ்வளவு நகைக் கடன் வாங்கலாம்?

image

தங்கம், வெள்ளி நகைக் கடன் வாங்குபவர்களுக்கு ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயித்துள்ளது. அதன்படி, ஒருவர் 1 கிலோ வரை தங்க நகைகள், 50 கிராம் வரை தங்க நாணயங்களை அடமானம் வைக்கலாம். இதேபோல், 10 கிலோ வரை வெள்ளி நகைகள், அரை கிலோ வரை வெள்ளி நாணயங்களை அடகு வைக்க முடியும். கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். மேலும், தங்கத்திற்கு அதன் மதிப்பில் 85% வரை கடன் வாங்க முடியும். SHARE IT.

News August 5, 2025

அடுத்த கட்டத்துக்குச் செல்லும் அஜித் மரண வழக்கு!

image

அஜித்குமார் மரண வழக்கில் தொடர்புடைய 5 தனிப்படை போலீசாரை 2 நாள்கள் விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 5 காவலர்களும் தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளனர். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின்போது மரணமடைந்த வழக்கை சிபிஐ கொலை வழக்காக பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறது. காவலர்களை விசாரிக்கும்போது, முக்கிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!