News May 9, 2024

சவுக்கு சங்கரின் மனு தள்ளுபடி

image

சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க தடை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு மே 22 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது அலுவலக ஊழியர் தொடர்ந்த மனுவிற்கு, குண்டர் சட்டம் என யூகத்தின் அடிப்படையில் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Similar News

News September 7, 2025

இந்தியாவிற்கு வர மறுக்கும் PAK மகளிர் அணி

image

இந்தியாவில் நடைபெற உள்ள ICC மகளிர் ODI உலகக்கோப்பை தொடக்க விழாவை பாக்., மகளிர் அணி புறக்கணிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் 30-ம் தேதி போட்டி தொடங்க உள்ள நிலையில், இத்தகைய அதிரடி முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. முன்னதாக, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக, பாக்., விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News September 7, 2025

கார்களின் விலையை ₹3.49 லட்சம் குறைத்த டொயோட்டா

image

GST 2.0 எதிரொலியாக டொயோட்டா நிறுவனம், ₹3.49 லட்சம் வரை கார்களின் விலையை குறைத்துள்ளது. Glanza – ₹85,300, Taisor – ₹1.11 லட்சம், Rumion – ₹48,700, Hyryder – ₹65,400, Crysta – ₹1.8 லட்சம், Hycross – ₹1.15 லட்சம், Fortuner – ₹3.49 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வர உள்ளது. முன்னதாக, டாடா, மஹிந்திரா, <<17632758>>ரெனால்ட்<<>> நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவித்தன.

News September 7, 2025

CM திட்டத்தை புறக்கணிக்கும் வருவாய் அலுவலர்கள்

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை புறக்கணிக்கப் போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போதிய கால அவகாசம் வழங்காமல் இரவு, பகலாக பணி செய்ய நிர்பந்திக்கப்படுவதாகவும், வரும் 25-ம் தேதி 40,000 வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், விரைவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும் என்றும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!