News March 19, 2024

ஊதிய ஒப்பந்தப் பட்டியலில் ஷர்ஃப்ராஸ், துருவ்

image

கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தப் பட்டியலில் ஷர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இருவரும் சிறப்பாக விளையாடினர். இந்த நிலையில், கிரிக்கெட் வாரிய உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் ஷர்ஃப்ராஸ், துருவ் ஆகியோரை ஊதியப் பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 16, 2026

தமிழகம் மீண்டும் முதலிடம்: ஜெயரஞ்சன்

image

2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பொருளாதார ஆய்வறிக்கையை CM ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளதாக ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். வளர்ந்த நாடுகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே விவசாயிகள் உள்ள நிலையில், TN-ல் 25% பேர் வேளாண்மையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார். உயர்கல்வி சேர்க்கையில் முன்னிலையில் உள்ளதாகவும், தொழில்துறையில் குறிப்பாக மின்னணு பொருள்கள் உற்பத்தியில் TN மீண்டும் முதலிடத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News February 16, 2026

25 மீனவர்கள் சிறைபிடிப்பு… கொந்தளித்த விஜய்

image

புதுச்சேரியை சேர்ந்த 25 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்கள் 25 பேரையும் உடனடியாக மீட்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க TN அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடிதம் எழுதுவதே போதும் என்று CM எண்ணுகிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News February 16, 2026

BREAKING: நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது

image

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. எனவே, இன்று பணிநேரம் முடிந்ததும் கடை சாவியை டாஸ்மாக் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு, நாளை முதல், தமிழகம் முழுவதும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால், நாளை டாஸ்மாக் கடைகள் திட்டமிட்டபடி இயங்காது.

error: Content is protected !!