News September 13, 2025
விஜய்க்கு எதிராக டிரெண்டாகும் #சனியின்_பயணம்

திருச்சியில் தனது முதல் தேர்தல் பரப்புரையை விஜய் தொடங்கியுள்ள நிலையில், தவெகவினர் திரளாக பங்கேற்று உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். தொண்டர்கள் வெள்ளத்திற்கு இடையே ஏர்போர்ட்டிலிருந்து மரக்கடை பகுதிக்கு விஜய்யின் வாகனம் ஊர்ந்து செல்கிறது. இதனிடையே, விஜய்க்கு எதிராக ஒருதரப்பினர் #சனியின்_பயணம் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். அதேநேரம், #தமிழகவெற்றிக்கழகம் ஹேஷ்டேக்கும் டிரெண்டாகிறது.
Similar News
News September 13, 2025
விஜய்யின் கூட்டத்தில் சிக்கிய ப.சிதம்பரத்தின் கார்

பிரச்சாரத்துக்காக திருச்சி சென்ற விஜய்யின் வாகனத்தை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்ததால் அங்கு போர்க்குவரத்து ஸ்தம்பித்தது. இதில், குன்றக்குடி செல்வதற்காக அவ்வழியாக வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரும் சிக்கியதால் பரபரப்பு நிலவியது. சுமார் அரை மணி நேரத்திற்கு, பிறகு போலீசார் வந்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்து ப.சிதம்பரத்தின் காரை அனுப்பிவைத்தனர்.
News September 13, 2025
இனி ‘பால் ஆதார்’ அட்டைக்கு இது கட்டாயம்

5 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் (Baal) ஆதார் அட்டை பெறுவதற்கு இனி பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என UIDAI அறிவித்துள்ளது. முன்னதாக, பிறப்பு சான்றிதழ் அடிப்படையில் ஒரு ஆதார், பெற்றோரின் பயோமெட்ரிக் அடிப்படையில் ஒரு ஆதார் என 2 ஆதார் அட்டைகள் பெறப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் இது நடைமுறைக்கு வரவுள்ளது.
News September 13, 2025
BREAKING: அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் அடுத்த கட்சி!

ADMK தலைமை வகிக்கும் NDA கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி(IJK) வெளியேறவுள்ளதாக தகவல் கசிந்தது. இதை உறுதிபடுத்தும் வகையில், ‘தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்ற இருக்கிற உங்களது வெற்றிப் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்’ என சற்றுமுன், பாரிவேந்தர் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார். இது, 2026 பேரவைத் தேர்தலில் TVK அணியில், IJK இடம்பெறுவதற்கான அச்சாரம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். நீங்க என்ன சொல்றீங்க?