News April 22, 2024
2024 மிஸ் திருநங்கையாக ஷாம்சி தேர்வு

விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மிஸ் திருநங்கை போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்றனர். 2024ஆம் ஆண்டிற்கான மிஸ் திருநங்கை போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஷாம்சி முதலிடமும், புதுவை வர்ஷா இரண்டாமிடமும், தூத்துக்குடி சுபப்பிரியா மூன்றாமிடமும் பிடித்தனர்.
Similar News
News January 2, 2026
நயன்தாராவின் செயலால் கோபத்தில் கோலிவுட்

பட விழாக்களில் ஹீரோயின்களுக்கு மரியாதை தரப்படுவதில்லை எனக் கூறி, கடந்த சில ஆண்டுகளாக புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நயன்தாரா தவிர்த்தார். ஆனால், தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்தின் பெரும்பாலான புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்று வருகிறார். இதனால், தமிழ் பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஓரவஞ்சனை செய்வதா என நயனுக்கு எதிராக டோலிவுட்டில் குரல்கள் எழுந்துள்ளன.
News January 2, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 568
▶குறள்:
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.
▶பொருள்: கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.
News January 2, 2026
₹2.20 லட்சம் கோடி மாயம்: அன்புமணி

கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவே கடன் வாங்கியதாக DMK அரசு கூறுவது பொய் என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். பொறுப்பேற்றது முதல் 2025 மார்ச் வரை ₹3.86 லட்சம் கோடி வாங்கியதாகவும், அதில் மூலதனச் செலவாக ₹1.66 லட்சம் கோடி மட்டுமே பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். RBI புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி, மீதமுள்ள ₹2.20 லட்சம் கோடி கடனை யாருக்கும் பயனளிக்காத வகையில் வீணாக அரசு செலவிட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.


