News February 21, 2025
ஜாகீர் கான் சாதனையை முறியடித்த ஷமி

ஐசிசி தொடர்களில், இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாகீர் கானின் சாதனையை முகமது ஷமி முறியடித்துள்ளார். ஐசிசி உலகக்கோப்பை கற்றும் சாம்பியன்ஸ் டிராஃபியில், இந்திய அணிக்காக விளையாடிய ஜாகீர் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த நிலையில், BANக்கு எதிரானப் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், மொத்தம் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பெருமைக்கு ஷமி சொந்தக்காரராகியுள்ளார்.
Similar News
News February 22, 2025
ரூ.60 கோடி ஜீவனாம்சம் கொடுத்தாரா சாஹல்?

இந்திய கிரிக்கெட்டர் சாஹல் – தனஸ்ரீ தம்பதியர் விவாகரத்து பெற்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அவர் தன் மனைவி தனஸ்ரீக்கு ஜீவனாம்சமாக ரூ.60 கோடி வழங்கியதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள தனஸ்ரீயின் பெற்றோர், தாங்கள் பணம் கேட்கவும் இல்லை, அப்படி எந்த ஆபரும் தங்களுக்கு வரவும் இல்லை என்று கூறியுள்ளதுடன், தங்கள் தனிப்பட்ட விஷயங்களில் இப்படி வதந்திகளை பரப்ப வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டனர்.
News February 22, 2025
ராசி பலன்கள் (22.02.2025)

மேஷம் – ஜெயம், ரிஷபம் – மகிழ்ச்சி, மிதுனம் – சுகம், கடகம் – உயர்வு, சிம்மம் – நட்பு, கன்னி – அமைதி, துலாம் – புகழ், விருச்சிகம் – ஆதரவு, தனுசு – பெருமை, மகரம் – சுபம், கும்பம் – செலவு, மீனம் – கீர்த்தி.
News February 22, 2025
கட்சி நிர்வாகிகளிடம் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை

மாமல்லபுரத்தில் வரும் 26ஆம் தேதி TVK பொதுக்குழு கூட்டம் நடைபெறும் விடுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். விஜய்யின் பாதுகாப்பு குறித்து, பவுன்சர்களிடமும், கட்சி நிர்வாகிகளுடனும் அவர் ஆலோசனை மேற்கொண்டார். விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், எப்போது அந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.