News October 26, 2025
திராவிட மாடல் அரசின் வெட்கக்கேடு: சீமான்

சென்னையில் பேனா மை கொட்டியதற்காக 5-ம் வகுப்பு சிறுமியை தலைமை ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைமை ஆசிரியன் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். திமுக வட்டச்செயலாளரின் தலையிட்டால் போலீஸ் தலையிடவில்லையா என கேள்வி எழுப்பிய அவர், இது திராவிட மாடல் அரசின் வெட்கக்கேடு எனவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News January 19, 2026
ஒற்றை காலில் நிற்பது மிகவும் நல்லது

ஒற்றைக் காலில் நிற்பதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஒற்றைக் காலில் நிற்பது ஒரு எளிய உடற்பயிற்சி போல் தோன்றினாலும், அது உடல் சமநிலை, தசை வலு, மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. வயதுடன் குறையும் தசை இழப்பு, கீழே விழும் ஆபத்து போன்ற அபாயங்களை இது குறைக்க உதவுகிறது. தினசரி பழக்கங்களில் இதைச் சேர்த்தால், உடலும் மூளையும் ஆரோக்கியமாக இருக்கும்.
News January 19, 2026
₹3.25 லட்சம் கோடிக்கு ரபேல் விமானங்களை வாங்க முடிவு

பிரான்ஸிடம் இருந்து ₹3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்கும் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத் துறை கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்திய விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் உள்ளன. இந்த 114 விமானங்களில் 12-18 மட்டுமே வாங்கப்பட்டு, மீதமுள்ளவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்காக பிரான்சின் ஏவியேஷன் நிறுவனம் இந்தியாவுடன் இணைந்து உற்பத்தியை தொடங்கும்.
News January 19, 2026
திவ்யா பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் தமிழ் 9-வது சீசனில், மகுடம் சூடிய திவ்யா கணேசனுக்கு டிராபி வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்ததற்காக அவருக்கு ரூ.50 லட்சம் மற்றும் மாருதி விக்டோரிஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த சீசனில் இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் என மொத்தம் 77 நாட்களுக்கு ரூ.23 லட்சத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. 2-வதாக சபரி, 3-வதாக விக்கல் விக்ரம், 4-வதாக அரோரா ஆகியோர் இடம்பிடித்தனர்.


