News May 4, 2024
எங்கள் சகோதரிகளிடம் இருந்து தாலியைப் பறிப்போமா?

நாட்டில் இஸ்லாமியர்களுக்கு அச்சம் நிறைந்த சூழல் நிலவி வருவதாக ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்தியில் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இந்துகளிடையே மோடி வெறுப்புணர்வைத் தூண்டுகிறார். எங்கள் சகோதரிகளிடம் இருந்து தாலியைப் பறிக்கும் அளவுக்கு நாங்கள் கீழ்த்தரமானவர்கள் அல்ல” என ஆவேசமாகக் கூறியுள்ளார்.
Similar News
News September 22, 2025
நடிகை MN ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பழம்பெரும் நடிகை MN ராஜத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. 1950 முதல் 60 வரை முன்னணி நடிகையாக கோலோச்சிய அவர், 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘ரத்த கண்ணீர்’, ‘பாசமலர்’, ‘நாடோடி மன்னன்’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ என பல முக்கியமான படங்களில் நடித்துள்ள அவருக்கு விருது வழங்கி நடிகர் சங்கம் கவுரவித்துள்ளது.
News September 22, 2025
பாலஸ்தீனம் நாடு ஒருபோதும் உருவாகாது: நெதன்யாகு

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக இங்கி., ஆஸி., கனடா உள்ளிட்ட நாடுகள் அறிவித்தன. இந்நிலையில், பாலஸ்தீன நாடு ஒருபோதும் உருவாகாது என்று இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தலைவர்கள் பயங்கரவாதத்தை பரிசளிக்கிறார்கள் என காட்டமாக கூறிய அவர், பல ஆண்டுகளாக வந்த அழுத்தங்களை எதிர்த்து பாலஸ்தீன நாடு உருவாகாமல் தடுத்ததாகவும் தெரிவித்தார்.
News September 22, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹3000 உயர்வு

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 1 கிராம் வெள்ளி விலை, இன்று ஒரே நாளில் ₹3 அதிகரித்து ₹148-க்கும், கிலோ வெள்ளி ₹3000 அதிகரித்து ₹1,48,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு விலை உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 4 நாள்களில் மட்டும் சுமார் ₹7000 அதிகரித்துள்ளது. வரும் நாள்களிலும் விலை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது