News May 7, 2025
Couple Goals Vibe-ல் ஷாலினி அஜித்குமார்

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் அஜித்குமார் இன்று தனது 54-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ரேஸில் பிஸியாக இருந்த அஜித், ஐபிஎல் மேட்ச் பார்த்து ரசிகர்களை குஷியாக்கினார். அதோடு, டெல்லியில் பத்மபூஷன் விருது வாங்கிய கையோடு சென்னை வந்த அவர் பேட்டி அளித்ததில் ரசிகர்கள் டபுள் ஹேப்பியாக உள்ளனர். இந்நிலையில், மனைவி ஷாலினி, அஜித்தின் 53-வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். #HBD AK
Similar News
News November 24, 2025
BREAKING: இந்தியா அபார வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கபடியில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. டாக்காவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, சீன தைபே அணிகள் மோதின. முதல் பாதியில் 20-16 என்ற கணக்கில் முன்னிலை வகித்த இந்தியா, 2-ம் பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்தது. இறுதியில் இந்தியா 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. சாதனை மகளிருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
News November 24, 2025
நிரந்தர டிஜிபி நியமனத்தில் தடுமாற்றம் ஏன்? EPS

டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே அடுத்த டிஜிபியை தேர்வு செய்யாதது ஏன் என EPS கேள்வி எழுப்பியுள்ளார். மாநில அரசே டிஜிபி பட்டியலை தயார் செய்ய வேண்டும் எனக்கூறிய அவர், வழக்கு தொடர்ந்த பிறகே பட்டியலை TN அரசு தயாரித்ததாக விமர்சித்துள்ளார். தேர்வு பட்டியலில் உள்ள 3 பேரும் அரசுக்கு கைப்பாவையாக செயல்படமாட்டார்கள் என்பதாலே இன்னும் டிஜிபி நியமிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News November 24, 2025
தர்மேந்திரா காலமானார்.. PM மோடி உருக்கமான இரங்கல்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான <<18375107>>தர்மேந்திரா<<>> உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு பாலிவுட் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ள PM மோடி, இந்திய சினிமாவில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தர்மேந்திரா தனது மாறுபட்ட நடிப்பால் எண்ணற்ற மக்களை கவர்ந்ததாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.


