News August 26, 2024
புதிய சாதனையை படைத்த ஷகிப் அல் ஹசன்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் BAN வீரர் ஷகிப் அல் ஹசன் முதல் இடத்தை பிடித்துள்ளார். பாக்., அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன் மூலம் சர்வதேச அளவில் 707 விக்கெட்டுகளை (444 போட்டிகள், 482 இன்னிங்ஸ்) கைப்பற்றிய இடது கை வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
Similar News
News March 3, 2026
சற்றுமுன்: வங்கிக் கணக்கில் மேலும் ரூ.2,000 வந்தது..

முதியோர், கைம்பெண்கள், திருநங்கை, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு நிதியாக இன்று ₹2,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது, ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை ₹1,200, சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹3,200 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
BREAKING: கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்கிரஸ்?

காங்., கேட்கும் கூடுதல் தொகுதிகளை அளிக்க திமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால், இன்று நடைபெறும் இறுதி பேச்சுவார்த்தைக்குபின் கூட்டணியிலிருந்து காங்., வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்., வெளியேறும்பட்சத்தில் காலியாகவுள்ள 4 ராஜ்யசபா இடங்களில் தேமுதிகவிற்கு ஒன்று, மீதமுள்ள 3 -ல் திமுகவே களமிறங்கவுள்ளது. இதற்கான வேட்பாளர்களையும் இன்று மாலை திமுக அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
News March 3, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹80 குறைந்தது

தங்கம் விலை இன்றும் (மார்ச் 3) குறைந்து பொதுமக்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது. 1 கிராம் தங்கம் ₹10 குறைந்து ₹15,650 -க்கும், 1 சவரன் ₹80 குறைந்து ₹1,25,200-க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹1,000 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.


