News August 25, 2024
வங்கதேச அணியிலிருந்து ஷகிப் அல் ஹசன் நீக்கம்?

வங்கதேச அணியிலிருந்து ஷகிப் அல் ஹசனை நீக்க, நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அங்கு நடந்த கலவரத்தில் இஸ்லாம் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில், ஷகிப் 28வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரிடம் விசாரணை நடத்த ஏதுவாக கிரிக்கெட் அணியிலிருந்து அவரை நீக்க, BCBக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பாரிஸ்டர் ஷாஜிப் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Similar News
News March 5, 2026
T20 WC: இந்திய அணி பேட்டிங்!

பெரும் பரபரப்புக்கிடையே வான்கடேவில் நடக்கும் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய உள்ள இந்திய அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது. இரண்டு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 5, 2026
தவெகவில் அதிரடி மாற்றம்.. விஜய் அறிவிப்பு

தவெகவில் மகளிருக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தும் வகையில் மாநில அளவிலான 11 நிர்வாகிகளை புதிதாக விஜய் நியமித்துள்ளார். அந்த வகையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஸ்பூர்த்தி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 10 இணை ஒருங்கிணைப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தவெகவின் மகளிர் படையின் செயல்பாடுகள் மற்ற கட்சிகளுக்கு சிம்ம சொப்பமானமாக விளங்குவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
News March 5, 2026
இந்தியா பைனலுக்கு செல்லாது: பாகிஸ்தான் வீரர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோற்கும் என பாக்., Ex வீரர் ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இங்கிலாந்து அணியே இறுதிப்போட்டிக்கு செல்லும் என அவர் கூறியுள்ளார். இத்தொடரில் இங்கிலாந்து அணி கடினமான சூழ்நிலைகளை கண்டுள்ளது என்றும், இந்தியாவை தோற்கடிக்க ஒரே ஒரு இங்கிலாந்து வீரர் சிறப்பாக செயல்பட்டாலே போதும் எனவும் அவர் கூறியுள்ளார்.


