News March 20, 2025

தடையை தகர்த்த ஷகிப் அல் ஹசன்

image

சந்தேகத்திற்குரிய வகையில் பந்து வீசுவதாக கூறி, வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் பந்து வீச ஐசிசி தடை விதித்திருந்தது. இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனாலும் துவண்டு போகாத ஷகிப், பல கட்ட முயற்சிக்கு பின் பந்துவீச்சை சரி செய்தார். அதன் தொடர்ச்சியாக 3ஆவது முறை சோதனையில் விதிமுறைக்கு உட்பட்டு பந்து வீசினார். இதனால் அவர் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

Similar News

News March 21, 2025

பங்குச்சந்தையில் அதிக முதலீடு: எச்சரிக்கும் மத்திய அரசு

image

மக்கள் தங்கள் வங்கி முதலீடுகளை, பங்குச்சந்தைக்கு மாற்றுவது ஆபத்தாக அமையும் என மத்திய நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது. அதிக வருவாய் கிடைக்கும் என்ற எண்ணத்தில் முறையான ஆய்வுகள் செய்யாமல், மக்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதால் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது. மக்களின் முதலீடே வங்கிகளுக்கான நிதி ஆதாரமாகும். அந்த முதலீடுகள் குறைவது, வங்கிகளுக்கு சவாலாகும் என்றும் தெரிவித்துள்ளது.

News March 21, 2025

அடுத்த 6 நாட்கள் மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

image

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் மார்ச் 26 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என முன்னறிவித்துள்ளது.

News March 21, 2025

அமெரிக்காவில் கல்வித் துறையை மூடிய டிரம்ப்

image

அமெரிக்காவில் கல்வித் துறையை மூடுவதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில் அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதே நேரம் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான நிதியுதவி, மானியம் உள்ளிட்ட சலுகைகள் தொடரும் என அவர் அறிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு மூலம் கல்வித் துறையை நிர்வகிக்கும் பொறுப்பு இனி அந்தந்த மாகாண அரசுகளிடமே ஒப்படைக்கப்படும்.

error: Content is protected !!