News May 2, 2024
ஷாருக், அமிதாப் நிராகரித்த படம் ₹3,145 கோடி வசூல்

இந்தியாவுக்கு ஆஸ்கர் விருதைப் பெற்று தந்த ஸ்லம்டாக் மில்லியனர் படம், ₹124 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. அப்படத்தில் அனில் கபூர் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஷாருக்கிடமும், பிறகு அமிதாப் மற்றும் கோவிந்தாவிடமும் படக்குழு பேச்சு நடத்தியுள்ளது. ஆனால் அவர்கள் 3 பேரும் மறுக்கவே, அனில் கபூர் நடித்தார். அந்தத் திரைப்படம் உலக அளவில் ₹3,145 கோடி வசூலைக் குவித்தது.
Similar News
News January 29, 2026
தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பில்லை: விஜய்

TN-ஐ பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று CM ஸ்டாலின் வாய் கூசாமல் பொய் சொல்வதாக விஜய் சாடியுள்ளார். தனது X-ல், பிஹார் மாநில தொழிலாளி கொலை & கல்லூரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஆகிய சம்பவங்களை சுட்டிக்காட்டி, TN-ல் மக்களுக்கும், பிழைப்பு தேடி வந்தோருக்கும் பாதுகாப்பில்லை என தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் DMK அரசு மெத்தனம் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.
News January 29, 2026
சற்றுமுன்: விலை மளமளவென சரிந்தது.. 1 கிலோ ₹7 மட்டுமே!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் வழக்கமாக, ₹40 வரை விற்கப்படும் 1 கிலோ தக்காளி, இன்று வெறும் ₹7-க்கு மட்டுமே விற்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதேபோல், நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் தக்காளி விலை வழக்கத்தைவிட குறைந்திருக்கிறது. உங்கள் ஊரில் 1 கிலோ எவ்வளவு?
News January 29, 2026
ரூபாயின் மதிப்பு மோசமாக இருந்தது.. நிர்மலா சீதாராமன்

ரூபாயின் மதிப்பு மோசமாக இருந்ததாக மக்களவையில் தாக்கல் செய்த கடந்த நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதில், ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த இந்தியா வெளிநாட்டு முதலீடுகளையே பெரிதும் சார்ந்துள்ளதாகவும், தற்போதைய மதிப்பு அதன் உண்மையான திறனை பிரதிபலிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவது குறிப்பிடத்தக்கது.


