News May 23, 2024
ஷாருக் கான் நலமாக இருக்கிறார்

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் Heat stroke காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில், அவர் நலமாக இருப்பதாக அவரது மேலாளர் பூஜா தத்லானி தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ச் செய்யப்படுவார் என்றும், ஒரு வாரம் ஓய்வெடுக்க முடிவு செய்திருப்பதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
Similar News
News March 9, 2026
வரலாறு காணாத வகையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் சூழலால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசு சரிந்து ₹92.31-ஆக உள்ளது. இதன் எதிரொலியால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக, கடந்த சில நாள்களாக குறைந்து வரும் தங்கம், எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கக்கூடும்.
News March 9, 2026
சூர்யகுமார் ஓய்வு.. வதந்திக்கு முற்றுப்புள்ளி

T20 WC பைனலுக்கு பிறகு சூர்யகுமார் தனது ஓய்வை அறிவிப்பார் என்று செய்திகள் வலம் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். போட்டிக்கு பிறகு நிருபரின் கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்றும் அடுத்து எதிர்வரும் ஒலிம்பிக் மற்றும் T20 WC-ஐ வெல்வதிலேயே தனது தற்போதைய கவனம் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த 2 தொடர்களும் 2028-ல் நடைபெற உள்ளன.
News March 9, 2026
FLASH: பங்குச்சந்தைகள் கடும் சரிவு.. பல லட்சம் கோடி இழப்பு!

வாரத்தின் முதல் நாளிலேயே வர்த்தகம் தொடங்கியதும் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. Sensex 2,050 புள்ளிகள் சரிந்து 76,881 புள்ளிகளிலும், Nifty 619 புள்ளிகள் சரிந்து 23,831 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. SBI, Maruti Suzuki, Asian Paints, ICICI Bank உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 3% – 5% வரை சரிந்ததால் அவற்றில் முதலீடு செய்தவர்கள் சுமார் ₹12 லட்சம் கோடிகளை இழந்துள்ளனர்.


