News October 17, 2025
16 வயது பெண்ணுடனான பாலியல் உறவு குற்றமல்ல: HC

2005-ல் 16 வயது பெண், தனது விருப்பத்தால் இஸ்லாம் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், தனது மகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்ணின் தந்தை தொடுத்த வழக்கில், இஸ்லாம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், இஸ்லாமின் மேல்முறையீட்டை விசாரித்த அலகாபாத் HC, முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ், திருமணமாகி 16 வயது பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டது குற்றமாகாது என கூறி, தண்டனையை ரத்து செய்தது.
Similar News
News October 17, 2025
இந்த வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் இதுதான்!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பேரவை கூட்டத்தொடர்களில் சில வார்த்தைகளை நாம் கேட்டுக் கொண்டே இருப்போம். உதாரணமாக, மசோதா, விதி எண் 110, வெளிநடப்பு போன்றவை. இதுபோன்ற பேரவை வார்த்தைகளின் அர்த்தம் என்ன, அதன் மீதான நடவடிக்கைகள் என்னவென்பதை மேலே swipe செய்து பாருங்கள். இதனை அரசியல் பேசும் உங்கள் உறவுகளுக்கும் ஷேர் பண்னுங்க.
News October 17, 2025
BREAKING: தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2,400 உயர்ந்தது

தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹300 உயர்ந்து ₹12,200-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹2,400 அதிகரித்து சவரன் ₹97,600-க்கு விற்பனையாகிறது. தங்கத்தை பொறுத்தவரையில் இம்மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹10,480(அக்.1 – அக்.17) அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 17, 2025
அரசு கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர் வேலை.. APPLY NOW

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி, வயது, பாடவாரியான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கான கால அவகாசம் நவ.10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <