News March 15, 2025
சிறுவயதில் பாலியல் தொந்தரவு.. நடிகர் வேதனை

ஹாலிவுட் நடிகர் ஜோனாதன் மேஜர்ஸ், 9 வயது சிறுவனாக இருந்தபோது பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். பத்திரிகை பேட்டியில் கசப்பான நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார். அதில், ஆண்களும் பெண்களும் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், தந்தை இல்லாததால் கவனிப்பதாக கூறி, இதை அவர்கள் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆன்ட்மேன் அன்ட் தி வாஸ்ப், க்ரீட் 3 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
Similar News
News March 16, 2025
APPLY NOW: இன்றே கடைசி நாள்

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மூலம் வழங்கப்படும் 4 வருட ஆசிரியர் படிப்பில் (ITEP) சேருவதற்கு நடத்தப்படும் NCET எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்விற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 16) கடைசி நாளாகும். ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 4 ஆண்டுகால ஆசிரியர் படிப்பில் சேர இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. <
News March 16, 2025
உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்ய ராணுவத்தால் சுற்றிவளைப்பு?

உக்ரைன் வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் ரஷ்ய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், குர்ஸ்கில் ஊடுருவிய உக்ரைன் வீரர்களை உயிருடன் புதின் விட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ஆயுதங்களை போட்டு சரணடைந்தால், உயிருடன் விடுவதாக புதின் கூறியிருந்தார். ஆனால் வீரர்கள் சுற்றிவளைக்கப்படவில்லை என உக்ரைன் மறுத்துள்ளது.
News March 16, 2025
இன்றைய (மார்ச் 16) நல்ல நேரம்

▶மார்ச்- 16 ▶பங்குனி – 2 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 03:30 PM – 04:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:30 AM – 06:00 AM ▶எமகண்டம்: 12:00 AM – 01:30 AM ▶குளிகை: 03:00 AM- 04:30 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி ▶நட்சத்திரம் : ஹஸ்தம்.