News April 20, 2025
இத்தாலி சிறையில் கைதிகளுக்கு பாலியல் அறை

இத்தாலியில் கைதிகள், துணையுடன் உடலுறவில் ஈடுபட பாலியல் அறை திறக்கப்பட்டுள்ளது. மத்திய உம்பிரியாவை சேர்ந்த கைதி, காதலியை தனிமையில் சந்திக்க அனுமதி கோரி கோர்ட்டை நாடினார். விசாரித்த கோர்ட் சிறைக் கைதிகள் தங்களது வாழ்க்கை துணை (அ) நீண்டகால காதலர்களை 2 மணி நேரம் தனிமையில் சந்திக்க அனுமதித்துள்ளது. ஏற்கனவே பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், ஸ்பெயினில் இது நடைமுறையில் உள்ளது.
Similar News
News September 10, 2025
டைம் ஓவர்.. அன்புமணி மீது பாயவுள்ள நடவடிக்கை?

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி விளக்கமளிக்க, ராமதாஸ் விதித்த கெடு இன்றோடு நிறைவடைகிறது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கெடுவில் அன்புமணி விளக்கமளிக்கவில்லை. தற்போது, மீண்டும் கெடு வழங்கியும் அதை அன்புமணி கண்டுகொள்ளாமல் இருப்பதால் ராமதாஸ் உச்சக்கட்ட டென்ஷனில் இருக்கிறாராம். இதனால், அவர் மீது தற்காலிக பொறுப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
News September 10, 2025
BREAKING: தங்கம் விலை.. நிம்மதியான செய்தி

கடந்த சில நாள்களாக அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 2 நாளில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,160 உயர்ந்தது. இதனால், இன்றும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹10,150-க்கும், 1 சவரன் ₹81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நகை பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
News September 10, 2025
மூக்கை நுழைக்கும் 3-வது நபர்: திமுக, விசிக சாடல்

ADMK பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அமித்ஷாவை சந்தித்தது பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், EPS-ஆல் நீக்கப்பட்ட ஒருவரை அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் என்ன துணிச்சலில் சந்தித்தார்கள்? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், தங்கள் கட்சி சிக்கல்களுக்காக இன்னொரு கட்சி தலைவரை பஞ்சாயத்துக்கு அழைக்கும் அதிமுகவின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என உதயநிதியும் சாடியுள்ளார்.