News April 22, 2025
ஓடும் பஸ்ஸில் உடலுறவு: கண்டக்டருக்கு சிக்கல்

மும்பை அருகே ஓடும் அரசு பஸ்ஸில் ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பான்வேல் – கல்யாண் சென்ற அந்த பஸ்ஸில் கூட்டம் இல்லாததால் பின் இருக்கையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டிராபிக்கில் பஸ் நின்றபோது, பைக்கில் வந்த இளைஞர் இதை கவனித்ததுடன், வீடியோ எடுத்து போஸ்ட் செய்துள்ளார். இதனால், பஸ் டிரைவர், கண்டக்டர் ஏன் இதை தட்டிக் கேட்கவில்லை என விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
சையது முஷ்டாக் அலி கோப்பையில் சாய் சுதர்சன்

அஹமதாபாத்தில் நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டிகளில், தமிழ்நாடு சீனியர் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று மிகப்பெரிய தோல்வியில் முடிந்த SA-க்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 15 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 14 ரன்களும் மட்டுமே சுதர்சன் எடுத்திருந்தார். இந்நிலையில் தான் அவர் சையது தொடரில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
News November 27, 2025
UNESCO தலைமையகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு

இந்திய அரசியலமைப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, பாரிஸில் உள்ள UNESCO தலைமையகத்தில் டாக்டர் அம்பேத்கரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்று PM மோடி நெகிழ்ந்துள்ளார். அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும், மக்களுக்கு வலிமையையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன என்றும் அவர் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News November 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 532 ▶குறள்: பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. ▶பொருள்: நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.


