News March 18, 2024

விருதுநகர் அருகே பாலியல் தொழில்; இருவர் கைது 

image

வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி பகுதியில் நேற்று குடியிருப்பில் வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் நடத்திய சோதனையில் இளம்பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்திய அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் 35, மற்றும் ராஜேந்திரன் 28 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News August 21, 2025

விருதுநகர்: இன்று போக்குவரத்தில் மாற்றம்

image

தவெக மாநாட்டை முன்னிட்டு இன்று போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை – மதுரை மார்க்கமாக விருதுநகர் செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், திருமங்கலம் வழியாகவும், விருதுநகர் செல்லும் பொதுமக்கள் ராம்நாடு ரிங்ரோடு, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக செல்லலாம். மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்கு அருப்புக்கோட்ட நகருக்குள் செல்ல அனுமதி இல்லை.

News August 20, 2025

கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ரங்கமன்னார் 

image

ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளுவது  வழக்கம். இந்நிலையில் ஆவணி மாத ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

News August 20, 2025

இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆத்திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் சேர 18 வயது முதல் 30 வயது உடையவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர் தாட்கோ இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!