News April 6, 2025
59 பேர் கொடூர கொலை…சீரியல் கில்லர் ஒப்புதல்

ரஷ்யாவில் வீடில்லாத மக்கள், போதைக்கு அடிமையானவர்கள், வயதானோர் என 1992 – 2006 வரை 48 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இக்கொலைகளை செய்த அலெக்சாண்டர் பிசிஸ்கின் (50) 2007இல் கைது செய்யப்பட்டார். ‘செஸ்போர்ட் கில்லர்’ என ரஷ்ய ஊடகங்களால் புனைப் பெயரில் அழைக்கப்பட்ட அவர், தற்போது மேலும் 11 பேரை கொலை செய்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இது ரஷ்ய போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Similar News
News April 7, 2025
மின்னணு வாக்குப்பதிவு: மனுவை தள்ளுபடி செய்தது SC

தேர்தலில் மின்னணு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளுடன் விவிபேட் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ண EC-க்கு உத்தரவிடக்காேரி தொடரப்பட்ட மனுவை SC தள்ளுபடி செய்தது. இதுதாெடர்பாக டெல்லி HC-யின் தீர்ப்பை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனுவை SC விசாரித்தது. அப்போது, ஏற்கெனவே தேர்தல் விவகாரத்தில் பலமுறை தீர்ப்பு அளிக்கப்பட்டு விட்டதாகவும், மீண்டும் அதே விவகாரத்தை விசாரிக்க விரும்பவில்லை என தெரிவித்தது.
News April 7, 2025
ஏப். 25-ல் வெளியாகிறது மோகன்லாலின் புதிய படம்!

மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் படம் வசூலில் சக்கைப்போடு போடும் நிலையில், அவரது ‘துடரும்’ பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப். 25-ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தில், 20 ஆண்டுகளுக்கு பிறகு மோகன்லாலுக்கு ஜோடியாக ஷோபனா நடித்துள்ளார். கார் ஓட்டுநராக இருக்கும் கதாநாயகன் எதிர்கொள்ளும் பிரச்னையே படத்தின் மையக்கரு என சொல்லப்படுகிறது. லாலேட்டன் ஃபேன்ஸ்க்கு இந்த மாதம் டபுள் ட்ரீட்தான்!
News April 7, 2025
முதலில் பேட்டிங் செய்கிறது RCB

முக்கியமான ஐபிஎல் போட்டியான இன்று, RCB அணியும் MI அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற MI அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பெங்களூரு அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளார். உலகளவில் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட இரண்டு அணிகள் மோதுவதால், இன்றைய போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.