News April 15, 2024
காதலனை கரம்பிடித்த சீரியல் நடிகை!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘கனா’ தொடரில் கதாநாயகியாக நடித்தவர் தர்ஷனா அசோகன். சமீபத்தில் அத்தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று தர்ஷனாவிற்கும், அபிஷேக் என்பவருக்கும் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. சில ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இன்று மணவாழ்க்கையில் இணைந்துள்ளனர். புதுமணத் தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிகிறது.
Similar News
News April 6, 2026
KKR Vs PBKS ஆட்டம் மழையால் பாதிப்பு

KKR, PBKS அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையின் குறுக்கீடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 3.4 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில், 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களை KKR எடுத்துள்ளது. ஃபின் ஆலன், கேமரூன் கிரீன் ஆகியோரின் விக்கெட்களை சேவியர் பார்ட்லெட் வீழ்த்தினார். 8 மணிக்கு 90% மழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியிருந்தது. எனவே, போட்டி தொடங்குமா என உறுதியாக தெரியவில்லை.
News April 6, 2026
சர்ச்சைகளுக்கு அஸ்வத்தாமன் முற்றுப்புள்ளி

சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், பண்ருட்டி தொகுதியில் சுயேச்சையாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் அஸ்வத்தாமனும் பங்கேற்றார். பின்னர் பேட்டியளித்த அவர், தேர்தலில் மோகனின் வெற்றிக்கு பாடுபடுவேன் எனக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். <<-se>>#TNElection2026<<>>
News April 6, 2026
நடிகை சுபாஷினி மரணம்.. உருக்கமான தகவல்

‘கயல்’ சீரியல் <<19578782>>நடிகை சுபாஷினியின் தற்கொலை<<>> சின்னத்திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வரும் 12-ம் தேதி அவருக்கு பிறந்த நாள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய குடும்பம் தற்போது கண்ணீரில் தத்தளிக்கிறது. அதுமட்டுமின்றி, வரும் 21-ம் தேதி சுபாஷினிக்கு 2-ம் ஆண்டு திருமண நாளாகும். தன் வாழ்வில் முக்கிய மாதமாக இருக்கும் ஏப்ரலிலேயே சுபாஷினி தற்கொலை செய்திருப்பது பெரும் சோகம். RIP


