News September 5, 2025

செப்டம்பர் 5: வரலாற்றில் இன்று

image

*ஆசிரியர் தினம்
*1799 – பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் தலைமையிலான படை முற்றுகையிட்டது.
*1872 – சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்தநாள்.
*1888 – நாட்டின் 2-வது ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்.
*1997 – அன்னை தெரசா நினைவு நாள்.

Similar News

News March 25, 2026

புதுச்சேரியில் 5 தொகுதிகளில் திமுக – காங்., நேரடி போட்டி?

image

புதுச்சேரியில் தொகுதி உடன்படிக்கை ஏற்பட்ட நிலையிலும், 5 தொகுதிகளில் திமுக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து தொகுதிகளிலும் இரு கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், மங்கலம், திருபுவனை, நெல்லித்தோப்பு, ராஜ்பவன், காலாப்பட்டு தொகுதிகளில் காங்., வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெறாமல், வாக்கு சேகரிப்பில் இறங்கியதால் குழப்பம் எழுந்துள்ளது.

News March 25, 2026

ரேசன் கார்டுகளுக்கு… அரசு முக்கிய செய்தி

image

ரேஷன் கார்டு மற்றும் பட்டா, சிட்டா சேவைகளை பொதுமக்கள் மிக எளிதாக பெற, மாதந்தோறும் தாலுகா வாரியாக பொதுவிநியோக திட்ட குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் TN-ல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இந்த குறைத்தீர்ப்பு முகாம்கள் நடைபெறாது என கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். எனவே தேர்தல் முடிவு வரும்வரை பொதுமக்கள் கலெக்டர் அலுவலகங்களுக்கு வீணாக அலைய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

News March 25, 2026

விருப்பமனு தொகையை திருப்பி தருவாரா கமல்?

image

திமுக கூட்டணியில் போதுமான சீட்கள் ஒதுக்கப்படாததால் <<19467680>>தேர்தலில் போட்டியிடவில்லை<<>> என்று கமல்ஹாசன் அறிவித்தார். இந்நிலையில், மநீம சார்பாக தேர்தலில் போட்டியிட ₹50,000 கொடுத்து விருப்பமனு பெற்றவர்கள், அத்தொகையை தலைமை திருப்பி அளிக்குமா என எதிர்பார்க்கின்றனராம். மேலும், குடியாத்தம் உள்ளிட்ட சில தொகுதிகளில் மநீம தேர்தல் அலுவலகம் திறப்பதற்கு செலவழித்த சில நிர்வாகிகளும் பணத்தை கேட்க திட்டமிட்டுள்ளனராம்.

error: Content is protected !!