News September 29, 2025

செப்டம்பர் 29: வரலாற்றில் இன்று

image

*உலக இதய நாள்.
*1832: இலங்கையில் கட்டாய வேலை ஒழிக்கப்பட்டது.
*1957: அரசியல்வாதி H.ராஜா பிறந்தநாள்.
*1970: நடிகை குஷ்பு பிறந்தநாள்.
*2011: வாச்சாத்தி வன்முறையில், தாக்குதல் நடத்திய 269 அதிகாரிகள், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 17 பேரும் குற்றவாளிகள் என இந்தியாவின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Similar News

News September 29, 2025

TNPSC குரூப் 4 ரிசல்ட் அப்டேட்

image

கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் 4-வது வாரத்தில் வெளியாகும் என TNPSC தலைவர் S.K.பிரபாகர் அறிவித்துள்ளார். அத்துடன், நேற்று நடைபெற்ற குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தேர்வை 4,18,791 பேர் எழுதியுள்ளனர். 1,34,843 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். இத்தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறுகின்றனர்.

News September 29, 2025

3 பேரின் ஆட்டம் அபாரம்: தினேஷ் கார்த்திக்

image

பாக்.,-ஐ 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இதற்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், தினேஷ் கார்த்திக் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ஃபைனலில் திலக் வர்மா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ் ஆகியோரின் சிறந்த முயற்சியையும் குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார். குல்தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். திலக் 69 ரன்கள் விளாசி களத்தில் இருந்தார்.

News September 29, 2025

21 நாட்கள் விதி தெரியுமா?

image

பிடிக்காத அல்லது கெட்டப் பழக்கத்தை கைவிட வேண்டுமா? அல்லது புதிய விஷயம் ஒன்றை தினசரி பழக்கமாக்க வேண்டுமா? இதற்கு 21 நாட்கள் விதி கைக்கொடுக்கும் என்கின்றனர். எந்த ஒன்றை தினசரி தொடர்ந்து 21 நாட்களுக்கு செய்கிறோமோ, அது அப்படியே தினசரி பழக்கமாகிவிடும் என்கிறது 21 நாட்கள் விதி. இதையே 90 நாட்கள் தொடர்ந்து செய்துவிட்டால், அது உங்கள் வாழ்க்கை முறையாகவே மாறிவிடும். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

error: Content is protected !!