News September 19, 2025
செப்டம்பர் 19: வரலாற்றில் இன்று

*1893 – உலகில் முதன்முறையாக நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. *1893 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் சொற்பொழிவை நிகழ்த்தினார். *1965 – இந்திய வம்சாவளியான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்தநாள். *1980 – தமிழிசை, நாடகக் கலைஞர் கே. பி. சுந்தராம்பாள் உயிரிழந்த நாள். *1985 – மெக்சிகோவில் நிகழ்ந்த 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 9,000 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News September 19, 2025
5 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்!

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வரும் 24-ம் தேதி வரை மாநிலத்தில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. அதேபோல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 19, 2025
மனிதர்கள் vs AI: ஜனநாயகன் க்ளைமாக்ஸ் இதுவா?

‘ஜனநாயகன்’ படத்தின் க்ளைமாக்ஸில், மனித வடிவிலான AI ரோபோக்களின் சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனிதர்கள் VS AI என்ற கருப்பொருளின் அடிப்படையில், மிக பிரம்மாண்டமாக இந்த காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாகவும், இந்திய சினிமாவில் முன்முயற்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அரசியல் படத்தில் ஏன் AI ரோபோக்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
News September 19, 2025
EPS பற்றிதான் CM-க்கு 24 மணி நேரமும் சிந்தனை: ஆர்.பி.,

EPS பிரசாரங்களில் கூடும் மக்கள் கூட்டமே அதிமுகவின் வெற்றிக்கு சாட்சி என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தில், EPS பற்றியே CM ஸ்டாலின் 24 மணிநேரமும் சிந்தித்து கொண்டிருப்பதாகவும், அதிமுக வெற்றியை திசைதிருப்ப, சில காலாவதி தலைவர்கள் ஒப்பாரி வைப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், உள்ளுக்குள் பயத்தை வைத்துக் கொண்டு, அதை வெளியில் காட்டாமல் ஆளுங்கட்சியினர் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.