News April 2, 2025

கச்சத்தீவை பெற இன்று தனித் தீர்மானம்

image

கச்சத்தீவை திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்றும், இலங்கை செல்லும் பிரதமர் மோடி, மீனவர் பிரச்னை குறித்து அந்நாட்டு அரசுடன் பேச வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 6, 2025

வேலை நேரம் முடிந்த பிறகும் வேலை செய்ய சொன்னால்..?

image

வேலை நேரம் முடிந்த பிறகும், Client உடன் பேசுங்கள், இந்த Task-ஐ செய்யுங்கள் என TL, மேனஜர்களிடம் இருந்து ஊழியர்களுக்கு அழைப்புகள் வருவது வழக்கம். இதுபோன்று வரும் இ-மெயில்கள், அழைப்புகளை துண்டிக்கும் உரிமையை ஊழியர்களுக்கு வழங்கும் வகையில், NCP MP சுப்ரியா சுலே லோக்சபாவில் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால் சட்டமாகும். இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமா?

News December 6, 2025

விஜய் பொதுக்கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி

image

புதுச்சேரியில் வரும் 9-ம் தேதி விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க முடியும் எனவும், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் போலீசார் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

News December 6, 2025

சமூகநீதியை காக்க உறுதியேற்போம்: விஜய்

image

தவெக அலுவலகத்தில் அம்பேத்கரின், படத்திற்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையை பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம் என சூளுரைத்துள்ளார். மேலும், அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர் அம்பேத்கர் என்றும் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

error: Content is protected !!