News June 26, 2024

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரி தனித்தீர்மானம்

image

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டுவரவுள்ளார். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில், கூட்டத்தொடரின் 7ஆம் நாளான இன்று அதற்கு பதிலளிக்கும் வகையில், இந்த தனித்தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

Similar News

News March 2, 2026

வேலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதுசெழியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News March 2, 2026

1 ரூபாய் செலவில்லாமல் ₹7 லட்சம் கிடைக்கும்

image

ஒரு ரூபாய் கூட பிரீமியம் செலுத்தாமல் EPFO-வில் ஊழியர்கள் ₹7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு பெறலாம். பணியில் இருக்கும் ஊழியர் இறந்தால், அவரது குடும்பம் அல்லது நாமினி, ₹2.5 லட்சம் – ₹7 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெற முடியும். ஊழியரின் கடைசி 12 மாத சராசரி சம்பளத்தின் அடிப்படையில் காப்பீடு தொகை கணக்கிடப்படும். EPFO போர்ட்டலில் உள்ள “Death claim filing by beneficiary”-ல் இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE.

News March 2, 2026

இபிஎஸ் அதிரடி.. செந்தில் பாலாஜி பதற்றம்

image

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால், அதனை சரிசெய்யும் பொருட்டே EPS டெல்லி சென்றுள்ளாராம். திமுகவிற்கு உதவும் IAS, IPS அதிகாரிகள் பட்டியலை கொடுப்பதோடு அமைச்சர் KN நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தவும், அமித்ஷாவிடம் EPS வலியுறுத்தவுள்ளாராம். இதனால் தேர்தலுக்கு முன்பு தமிழக அரசியலில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!