News May 28, 2024
இருசக்கர வாகனங்களுக்காக சாலைகளில் தனி பாதை?

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்து, உயிரிழப்புகளுக்கு 44% இருசக்கர வாகன ஓட்டிகளும், 17% சாலை விபத்து, 19% உயிரிழப்புக்கு பாதசாரிகளும் காரணமாக கூறப்படுகிறது. இதற்குத் தீர்வு காண மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், மாநில, கிராமப்புற சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு தனிப் பாதை, பாதசாரிகளுக்கு நடை மேம்பாலம், சுரங்கப் பாதை அமைக்க SAFE திட்டம் வகுத்து கருத்து கேட்டு வருகிறது.
Similar News
News March 4, 2026
ஈரான் மீதான டிரம்பின் குற்றச்சாட்டு பொய்யா?

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் ஒருங்கிணைந்த திட்டத்திற்கான எந்தவொரு ஆதாரமும் தங்களுக்கு கிடைக்கவில்லை என ஐநாவின் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார். ஈரானின் அணு ஆயுத திட்டத்தை தடுக்கவே ஈரானுடன் போரிட்டு வருவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் க்ரோஸின் பதில் ஈரானை முழு மூச்சுடன் தாக்கி வரும் டிரம்பின் முதன்மை குற்றச்சாட்டையே கேள்வி குறியாக்கியுள்ளது.
News March 4, 2026
பெண்களை போதை பொருளாக பாக்கும் திமுகவினர்: TTV

விமானப் பணிப்பெண்ணிடம் திமுக நிர்வாகி <<19289115>>அத்துமீறியதை <<>>சுட்டிக்காட்டி அக்கட்சியை TTV கடுமையாக விமர்சித்துள்ளார். விமானத்திலும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது தான் திமுகவின் சாதனை என சாடியுள்ளார். பெண்களை போகப் பொருள்களாக மட்டுமே பார்க்கும் திமுகவினரை ஸ்டாலின் உடனடியாக ஒடுக்கத் தவறினால், வரும் தேர்தலில் அனைத்து மகளிரும் திமுகவுக்கு சம்பட்டி அடி கொடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 4, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


