News April 29, 2025
வெளி மாநிலத்தவர்களுக்கு தனி ID கார்டு: அமைச்சர்

தமிழ்நாட்டில் பணியாற்றும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடமாநிலத்தவர் வருகை அதிகரித்து வருவதாகவும், வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல, கண்காணிக்கும் முறையை கொண்டு வர வேண்டும் எனவும் சட்டப்பேரவையில் வேல்முருகன் MLA கோரிக்கை விடுத்தார். அதற்கு, ID கார்டு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.
Similar News
News December 2, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (டிச.,1) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News December 2, 2025
தேமுதிகவின் இருண்ட காலம் அகன்றுவிட்டது: பிரேமலதா

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும் தேமுதிகவின் இருண்ட காலம் அகன்றுவிட்டதாகவும், இனி பிரகாசம்தான் எனவும் கூறியுள்ளார். எங்களது தொண்டர்களை அரசாங்க பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது தனது ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News December 2, 2025
நள்ளிரவு 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும்

நள்ளிரவு 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்திடுங்க மக்களே. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதா?


