News December 9, 2024
இன்று இரவுக்குள் அனுப்பி வைக்கப்படும் தனித்தீர்மானம்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானம் இன்று இரவுக்குள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்ததால், தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, இன்று இரவுக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி, விரைந்து ஒப்புதல் பெற அரசு திட்டமிட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
திமுக – காங்., கூட்டணி.. இதுவே கடைசி முயற்சி

திமுக – காங்., இடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக காங்., நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையில், கார்கே வேண்டுகோளை ஏற்று, குழப்பத்தை சரி செய்ய கடைசி முயற்சியாக செல்வப்பெருந்தகை சிதம்பரம் ஆகியோர் ஸ்டாலினை சற்றுநேரத்தில் சந்திக்கவிருக்கிறார். ஒருவேளை, கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தால், எவ்வளவு தொகுதி ஒதுக்கீடு செய்யலாம் என்பது குறித்து ஸ்டாலினும் ஆலோசிக்கவிருக்கிறார்.
News March 3, 2026
₹3,200 + ₹3,500 + ₹4,000.. ஸ்டாலின் அறிவித்தார்

மகளிர் உரிமைத் தொகையுடன் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ₹2,000 வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, *29 லட்சத்து 29 ஆயிரம் முதியோர், கைம்பெண்களுக்கு ₹1200 +₹2000 என மொத்தம் ₹3200, *ஐந்து லட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு ₹1500 +₹2000 என மொத்தம் ₹3500, *பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 லட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு மொத்தம் ₹4000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
திமுகவில் யார் யாருக்கு ராஜ்யசபா சீட்

கூட்டணி முடிவை இன்றுக்குள் அறிவிக்க காங்கிரஸுக்கு திமுக கெடு விதித்துள்ளது. அப்படி அறிவிக்கவில்லை என்றால், இன்றே ராஜ்யசபா வேட்பாளர்களை திமுக அறிவிக்கவுள்ளது. அதன்படி திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் காங்கிரஸுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் 3-வது வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


