News September 13, 2024
B.Ed படிப்புக்கு செப். 16 முதல் விண்ணப்பம்

பி.எட். படிப்புகளுக்கு செப். 16ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ITI அட்மிஷனுக்கான காலக்கெடு நீட்டிப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டார். இதனிடையே, இருமொழி கொள்கை அண்ணா காலத்தில் இருந்து செயல்படுத்தி வருவதாகவும், NEPஇல் உள்ள திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பே தாங்கள் அவற்றை நடைமுறைபடுத்தி விட்டதாகவும் கூறினார்.
Similar News
News November 18, 2025
மாவோயிஸ்ட் முக்கிய தளபதி என்கவுன்ட்டர்

ஆந்திராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில், 6 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இதில், மாவோயிஸ்ட்களின் முக்கிய தளபதி ஹிட்மா, அவரது மனைவி உயிரிழந்தனர். பல மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த ஹிட்மா, 26 தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர். ஆயுதங்களை கையாள்வது, பழுதுபார்ப்பதில் கை தேர்ந்தவரான இவரை பற்றி தகவல் தெரிவித்தால், ₹50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

SIR-க்கு எதிராக SC-யில் கேரள அரசு வழக்கு

SIR நடைமுறைக்கு எதிராக கேரள அரசு சார்பில் SC-யில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியும் ஒரே நேரத்தில் வருகிறது. இதனால், பணியாளர்கள் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாமல், இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு நேரம் இருப்பதால், SIR நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.