News September 15, 2024
செப். 15., வரலாற்றில் இன்று

▶ 1987 – இந்திய அமைதிப் படைக்கு எதிராக திலீபன் நல்லூரில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.▶ 1981 – தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.▶ 1959 – டெல்லியில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவை தொடங்கப்பட்டது.▶ 1909 – முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை பிறந்த தினம்.▶ 1967 – நடிகை ரம்யா கிருஷ்ணன் பிறந்த தினம்.▶ 1950 – மறைமலை அடிகள் மறைந்த தினம்.▶ இந்தியாவில் பொறியாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Similar News
News December 14, 2025
சுப்மன் கில் டி20-க்கு கண்டிப்பாக தேவை: ஏபிடி

டி20-ல் தொடர்ந்து சொதப்பி வரும் சுப்மன் கில்லை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் ஒன்று இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாததால் கில்லை நீக்குவது சரியானதாக இருக்காது என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். அதிரடி வீரர்கள் நிறைந்த இந்திய அணியில் கில் போன்றவர் நிச்சயம் தேவை என்றும், முக்கியமான போட்டியில் அவர் ரன்களை குவிப்பார் என்றும் ஏபிடி கூறியுள்ளார்.
News December 14, 2025
வரலாற்றில் இன்று

*1812 – ரஷ்யா மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
*1799 – அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் மறைந்த நாள்.
*1959 – தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார் மறைந்தநாள்.
*1965 – இயக்குநர் வசந்த் பிறந்த தினம்.
*1984 – நடிகர் ராணா டகுபதி பிறந்தநாள்.
News December 14, 2025
‘பராசக்தி’ படம் ரிலீஸில் மாற்றமா?

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் பொங்கலையொட்டி ஜன.14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்று தெலுங்கில் பெரிய ஹீரோக்களின் 3 படங்கள் வெளியாக இருப்பதால், ஆந்திராவில் பராசக்திக்கு தியேட்டர்கள் கிடைக்காது என கூறப்படுகிறது. இதனால் விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியாகும் ஜன 9-ம் தேதி, SK-வின் படமும் வெளியாக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.


