News April 27, 2025
செந்தில் பாலாஜி இலாகாக்கள், இனி இவர்கள் வசம்?

கோவையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் உதயநிதி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிகளே அமைச்சராக <<16230061>>செந்தில் பாலாஜி <<>>பங்கேற்கும் கடைசி நிகழ்ச்சி எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும், அவர் வசமுள்ள மின்சாரத்துறை தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு, ஆயத்தீர்வை இலாகா முத்துசாமிக்கும் கூடுதலாக அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 9, 2025
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிய விஜய்

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, விஜய் தனது பரப்புரையை தொடங்கினார். மத்திய அரசுக்கு இருப்பதுபோல் தமிழகம் தனி மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்ற வேறுபாடு தனக்கு கிடையாது என விஜய் கூறியுள்ளார். மக்கள் சந்திப்பில் பேசிய அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16-வது முறையாக தீர்மானம் அனுப்பியும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என அவர் விமர்சித்தார்.
News December 9, 2025
பிரதீப்பின் ‘LIK’ ரிலீஸில் மீண்டும் சிக்கலா?

பிரதீப்பின் படங்கள் தொடர்ந்து ₹100 கோடி வசூலை கொடுத்ததால், அடுத்து ரிலீஸாக உள்ள LIK படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. சென்ற தீபாவளிக்கே ரிலீஸாக வேண்டிய இப்படம், டியூட் ரிலீஸால் தள்ளிப்போனது. இதனையடுத்து டிச.18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. அதாவது ஒரேடியாக அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிடுவதாக பேசப்படுகிறது.
News December 9, 2025
2025-ல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய PHOTOS

2025-ம் ஆண்டு ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அதிர்ச்சி, துக்கம், விரக்தி, பெருமை, நம்பிக்கை, மகிழ்ச்சி என கலவையான எமோஷன்களை ஏற்படுத்திய நிறைய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதில் மிக மிக முக்கியமான சம்பவங்களை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். 2025-ம் ஆண்டை ரீவைண்ட் செய்து பார்க்க அவற்றை SWIPE செய்யுங்கள். உங்கள் மனதை உலுக்கிய சம்பவத்தை கமெண்ட்ல சொல்லுங்க.


