News July 6, 2025
கரூரில் தொடரும் செந்தில் பாலாஜியின் வேட்டை!

கரூர், கோவையில் மாற்றுக் கட்சியினரை திமுகவுக்குள் இழுக்கும் பணியைச் செந்தில் பாலாஜி தீவிரப்படுத்தியுள்ளார். <<16877469>>கடந்த வாரம்<<>> மதிமுக, அதிமுக, தவெக, தேமுதிக நிர்வாகிகள் பலரையும் திமுகவில் இணைத்தார். இந்நிலையில், இன்று (ஜூலை 6) கரூர் பஞ்சமாதேவி பகுதியில் அதிமுக கிளை அவைத்தலைவர் முருகேசன் உள்ளிட்ட அதிமுக, தவெகவினர் பலரும் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.
Similar News
News July 6, 2025
தவெக உறுப்பினர் சேர்க்கை: பயிற்சி பட்டறை அறிவிப்பு

2 கோடி உறுப்பினர் சேர்க்கையை இலக்காகக் கொண்டு தவெக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இதற்கான பயிற்சிப் பட்டறை வருகிற 8-ம் தேதி பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இதில் மாவட்டச் செயலாளர்கள், அந்தந்த மாவட்டத்தின் 2 IT Wing நிர்வாகிகளை அழைத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் உள்கட்டமைப்பில் தவெக கவனம் செலுத்தி வருகிறது.
News July 6, 2025
ஜூலை 9 வரை வெப்பநிலை அதிகரிக்கும்: IMD

தமிழகத்தில் பருவமழை குறைந்து மீண்டும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று சென்னை, மதுரை, தஞ்சை, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெயில் (100 டிகிரி பாரன்ஹீட்) சதமடித்துள்ளது. இந்நிலையில், ஜூன் 9 வரை தமிழகத்தில் இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும் என IMD எச்சரித்துள்ளது. இதனால், வெயில் அதிகமாக இருக்கும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிருங்கள் மக்களே..!
News July 6, 2025
தேர்தல் வியூகம் தயார்! மாநாட்டு தேதியை அறிவித்த பாஜக

தமிழக பாஜகவின் முதல் மாநாடு வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தனிப்பெரும் பலத்தை நிரூபிக்கும் விதமாக அடுத்தடுத்த மாநாடுகளை பாஜக நடத்த திட்டமிட்டுள்ளது. காட்டாங்குளத்தூரில் இன்று நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக இந்த மாநாடு உதவும் என பாஜக நம்புகிறது.