News August 2, 2024
செந்தில் பாலாஜிக்கு வாந்தி, மயக்கம்

செந்தில் பாலாஜிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவதிப்படுவதாக, புழல் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணைக்காக காணொலி காட்சி மூலம், படுத்த படுக்கையாக அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதுகுறித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கேள்வி எழுப்பியபோது, அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், புழல் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்தது.
Similar News
News November 28, 2025
டியூட் படத்தில் ‘கருத்த மச்சான்’ பாடல் நீக்கம்!

இளையராஜா இசையமைத்திருந்த ‘கருத்த மச்சான்’ பாடலை டியூட் படத்தில் இருந்து நீக்க சென்னை HC உத்தரவிட்டுள்ளது. தனது அனுமதியின்றி, தனது பாடல்களை பயன்படுத்தப்பட்டுள்ளதாக இளையராஜா சென்னை HC வழக்கு தாக்கல் செய்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கெனவே, இதே போல ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘இளமை இதோ இதோ’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’ பாடல்களும் இது போல நீக்கப்பட்டிருந்தன.
News November 28, 2025
பூதக்கண்ணாடியில பாருங்க PM: செல்வப்பெருந்தகை

பிஹார் காற்று TN-ல் வீசுவதாக PM மோடி பேசியதற்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். பிஹாரில் பாஜக குறுக்கு வழியில் வென்றதாகவும், அதை வைத்து அனைத்து மாநில தேர்தல் முடிவுகளையும் முடிவு செய்யக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், காங்., இரண்டாக உடையும் என PM பேசியதை குறிப்பிட்ட அவர், TN பாஜக எத்தனை கோஷ்டிகளாக உடைந்திருக்கிறது என்பதை PM பூதக்கண்ணாடி வைத்து பார்க்கவேண்டும் என கூறியுள்ளார்.
News November 28, 2025
வெள்ளி விலை ₹12,000 உயர்ந்தது

வெள்ளி விலை மீண்டும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ₹12,000 உயர்ந்தது. இன்று(நவ.28) கிராமுக்கு ₹3 அதிகரித்து ₹183-க்கும், கிலோவுக்கு ₹3,000 அதிகரித்து ₹1,83,000-க்கும் விற்பனையாகிறது. உலக சந்தையில் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதே, இந்தியாவில் விலை அதிகரிப்புக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


