News March 25, 2025

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக் கூடாது: அண்ணாமலை

image

அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஜாமீன் கிடைக்க பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது எனவும் சாடியுள்ளார். முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது செந்தில் பாலாஜி மீது கூறிய குற்றச்சாட்டுக்களை மறந்து அவரை அமைச்சராக தொடர வைப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News March 26, 2025

10 மாவட்டங்களில் மழை பெய்யும்

image

அடுத்த 2 மணி நேரத்தில் (7 மணி வரை) தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News March 26, 2025

பாஜகவுடன் கூட்டணியா? – மழுப்பிய இபிஎஸ்

image

அமித்ஷா – இபிஎஸ் சந்திப்பு அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என்ற யூகத்தை அதிகரித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இபிஎஸ் நேரடியாக பதில் அளிக்கவில்லை. கூட்டணி அமையும்போது தங்களிடம் தெரிவிப்பேன் எனக் கூறிய அவர், ஒவ்வொரு கட்சியும் தேவைக்கு ஏற்ப கூட்டணி முடிவெடுக்கும் எனக் குறிப்பிட்டார். கூட்டணி அரசு அமையும் என்ற அமித்ஷாவின் பதிவு அவரது கட்சியின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.

News March 26, 2025

அதிமுக கேட்ட கணக்கு இதுதான்…!

image

1972-ல் திமுக பொருளாளராக இருந்த எம்ஜிஆர், கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என திமுக பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது என கேள்வி எழுப்பினார். இது திமுகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதால், அவர் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததே அதிமுக என்ற கட்சி தோன்ற காரணமாக அமைந்தது.

error: Content is protected !!