News March 21, 2024
28வது முறையாக செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜுன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர், 250 நாள்களை கடந்து சிறையில் இருந்து வருகிறார். பல முறை ஜாமின் கோரி அவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த போதும் அவரின் கோரிக்கையை நீதிமன்றங்கள் ஏற்கவில்லை. இந்நிலையில், அவரின் நீதிமன்ற காவலை நாளை வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News February 14, 2026
FLASH: புதுவையில் 9.44 லட்சம் வாக்காளர்கள்!

SIR பணிகளுக்கு பிறகு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளின் இறுதி வாக்காளர்கள் பட்டியல் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 5,00,477 பெண்கள், 4,43,595 ஆண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 139 பேர் என மொத்த 9,44,211 பேர் இடம் பெற்றுள்ளனர். இறப்பு, இடமாற்றம், இருமுறை பதிவு உள்ளிட்ட காரணங்களால் 16,619 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது.
News February 14, 2026
காங்., ஆட்சியில் தினம்தினம் தாக்குதல்: அமித்ஷா

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடக்கும் என அமித்ஷா கூறியுள்ளார். இது குறித்து அவர்கள் வாய் திறக்கமாட்டார்கள் என்ற அவர், மோடி வந்த பிறகு முதன்முறையாக புல்வாமா தாக்குதலுக்கு வான்வழியாக பதிலடி தரப்பட்டது என்றார். மேலும், புதுச்சேரியில் நாராயணசாமியின் அரசு ஊழல் நிரம்பியதாக இருந்ததாகவும் அவர் விமர்சித்தார்.
News February 14, 2026
3 நாளில் 10,000 ஆணுறைகள் காலி…

இத்தாலியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கிய 3 நாள்களில் 10,000 ஆணுறைகள் காலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1988-ல் சியோல் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, எய்ட்ஸ் நோய் பரவியதை அடுத்து ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு இலவச ஆணுறைகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் குறைவாக வழங்கியதே காலியானதற்கு காரணம் என்றும், தற்போது கூடுதலாக வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


