News April 28, 2025
செந்தில் பாலாஜிக்கு கூடுதல் கட்டுப்பாடு தேவை: ED

செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. இதில், செந்தில் பாலாஜி மீதான ஜாமின் நிபந்தனையில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும் வரை அவர் மீண்டும் அமைச்சராகக் கூடாது, எந்த பொறுப்பிலும் இருக்கக் கூடாது என்றும் ED வலியுறுத்தியுள்ளது.
Similar News
News October 15, 2025
தீபாவளி வரை கனமழை கொட்டி தீர்க்கும்

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி இன்று கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தீபாவளி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 15, 2025
Bussiness Roundup: இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தது

*வாரத்தின் 2-ம் நாளான நேற்றும் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ந்தன. * செப்டம்பர் மாதத்திற்கான நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த மாதத்தை விட 0.39% குறைந்து 0.13% ஆக உள்ளது. *அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 காசுகள் சரிந்து ₹88.80 ஆனது. *EPFO-ல் இருந்து முழு பென்சன் பணத்தையும் எடுக்க, சம்பந்தப்பட்ட ஊழியர் 36 மாதம் வேலையில்லாமல் இருக்க வேண்டும்.
News October 15, 2025
தனியார் பள்ளிகளுக்கு 31-ம் தேதி வரை கெடு

கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களின் விவரங்களை வரும் 31-ம் தேதிக்குள் சமர்பிக்க, தனியார் பள்ளிகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. வரும் 17-ம் தேதிக்குள் விவரங்களை சமர்பிக்க தனியார் பள்ளிகளின் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், அதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன.